வங்கிக் கடன்களை மீள செலுத்த இயலாத தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை காலம்

வங்கிக் கடன்களை மீள செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் சலுகை காலமொன்றை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வங்கி தலைமை அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (15) நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன்களை மீள செலுத்த முடியாதவர்கள் மற்றும் வங்கி ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காக சட்டபூர்வ அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரச நிறுவனம் அல்லது அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply