நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்தும் அச்சுறுத்தலிலேயே !

ஸ்ரீலங்காவின் பாதுகாப்பினை உறுதிசெய்துவிட்டதாக கோட்டாபய-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் கூறினாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்தும் அச்சுறுத்தலிலேயே காணப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பாதுகாப்பு அமைச்சை வைத்திருந்த முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதனூடாக கிடைத்த வரப்பிரசாதங்களை அனுபவித்தாரே தவிர நாட்டிற்கு சேவைசெய்யவில்லை. ரணில், சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக நான் பல குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு விசாரணையில் முன்வைத்திருந்த போதிலும் அவை ஒன்றிலும் உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை.

சிங்கப்பூர் சென்றிருந்த மைத்திரி ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாடு திரும்பவில்லை. மூன்று விமானங்கள் பயணத்திலிருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி நாடு திரும்ப நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பலரும் இன்று கூறலாம்.

ஆனாலும் எனக்குத் தெரிந்த வகையில், நாட்டில் அரசாங்கம் மாறியிருந்த போதிலும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை. 17 முகாம்களிலும் ஆயிரம் பேர்வரை பயிற்சி பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கான உறுதிமொழியை வழங்கியிருந்த 15 பெண்களில் அவர்களில் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உண்மையில் பயிற்சி பெற்றவர்களில் 250 பேர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.

தொடர்ந்தும் இந்த இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. ஓரிருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றதனை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உறுதிசெய்துவிட்டோம் எனக் கூறமுடியாது தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply