தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டாமென WHO வலியுறுத்தல்

COVID – 19 தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனம் நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஒக்ஸ்பர்ட் – அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இதனையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டமையினால் மரணங்கள் ஏற்படுகின்றமை தொடர்பில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழு இன்று (16) கூடுகின்றது.

அத்துடன், ஐரோப்பிய மருத்துவ அமைப்பும் இன்று கூடுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த சுமார் 17 மில்லியன் பேர், இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதுடன் அவர்களில் 40 பேருக்கு மாத்திரமே குருதி உறைவு பிரச்சினை பதிவாகியுள்ளதாக அஸ்ட்ரா செனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply