மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழப்பு;மன்னாரில் துயரம்

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்
குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படு
காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செட்டிக்குளத்துக்கு மரணச் சடங்கு வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் மன்
னார் நோக்கி வீடு திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை
திருமணம் செய்த 36 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படு
கின்றது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply