மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு இந்தியத் தூதுவரிடம் சாள்ஸ் எம்.பி. கோரிக்கை

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் நடாத்த இந்தியா ஆவன செய்ய வேண்டும் என இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.


தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட 30 நோட்டிக் மைல் தூரத்துக்கு போருக்கு முன்பு கப்பல் சேவை இடம்பெற்றது. அந்தச் சேவை இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாகவே கைவிடப்பட்டது. இதனால் மன்னார் மக்களும் வடக்கு மா காண மக்களும் பெ ரு ம் தொகை ப் பணத்தை செலவு செய்தே இந்தியா பயணிக்கும் நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலைமையை இந்தியா புரிந்துகொண்டு இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முன் வர வேண்டும் என வடக்கிற்கு 3 நாள் பயணமாக வருகை தந்துள்ள இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர்,கப்பல் சேவை தொடர்பில் உரிய கவனம்செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான முயற்சிகளில் தற்போது கப்பல் சேவைக்கானபணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை வரையில் சென்று விட்டோம் என்றார்.

Be the first to comment

Leave a Reply