நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 5ஆம் தர வகுப்பு இடைநிறுத்தம்

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 5 மாணவர் ஒருவர் கொவிட்-19 தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து குறித்த வகுப்பு இடைநிறுத் தப்பட்டுள்ளது.


குறித்த மாணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டமை நேற்று உறுதியானது.
இது குறித்து ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் கூறுகையில், சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் தரம் 5 வகுப்பின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

தொற்றுக்குள்ளான மாணவருடன் நெருங்கிய தொடர்புள்ள மாணவர்கள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply