ஜஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அபுஹின்ட் என்ற இந்திய உளவாளியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார்- ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக தகவல்

ஜஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அபுஹின்ட் என்ற இந்திய உளவாளியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவினர் மூன்று தடவை துல்லியமான தகவல்களை வழங்கியிருந்தனர் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
ஜஹ்ரானின் குழுவிற்குள் ஊடுருவிய அபுஹின்ட் என்ற இந்திய உளவாளியே தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார் என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

அபுஹின்ட் தான் இந்தியாவிற்கான ஐஎஸ் அமைப்பின் தலைவர் என தெரிவித்தே ஜஹ்ரான் குழுவினருடன் தொடர்பை பேணியுள்ளார் அதன் மூலம் தெவ்ஹீத் ஜமாத் அமைப்பிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சிலோனடுடே குறிப்பிட்டுள்ளது.
2019 ஏப்பிரல் 4, 20 21 ம் திகதிகளில் தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநருக்கு அபுஹின்ட் மூலமாக எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவேளை ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி ஜஹ்ரான் ஹாசிம் அபுஹின்ட் இந்தியாவிற்கான ஐஎஸ் அமைப்பின் பிரதிநிதி என கருதினார் என தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது சகோதரரும் அபுஹின்டுடன் இணையம் மூலமாக தொடர்ச்சியாக தொடர்பிலிருந்ததாக ஜஹ்ரான் ஹாசிம் தெரிவித்தார் எனவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply