சிங்கள பௌத்த மக்களுக்கு மகிந்த விடுத்துள்ள கட்டாய உத்தரவு

பௌத்தர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்தது பௌர்ணமி போயா நாட்களிலாவது விகாரைக்கு வருவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று காலை புத்தளம் மாதம்பே விகாரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுவர்களை தஹாம் பள்ளிகளுக்கு (ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள்) அனுப்புவதை கட்டாயமாக்க வேண்டும். மற்ற மதங்கள் அதைப் பின்பற்றுகின்றன. அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்கிறார்கள் ”, என்று பிரதமர் கூறினார்.

“பௌத்தர்களாக விகாரைகளுக்கு வருவதையும் கட்டாயமாக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்தது போயா நாட்களில் பௌத்தர்கள் விகாரைகளுக்கு வர வேண்டும் ”என்று பிரதமர் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply