க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்கள
ஆணையாளர் சனத் பூஜித் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் நெருக்கடியால் பாடசாலைகளில் பாடத் திட்டங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று
அவர் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர்,மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுட
னான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில்,
நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினருடன் ஆராய்ந்து
இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய காலப்பகுதி பின்னர் அறிவிக்கப்படும்
எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply