கொரோனா தொற்றால் மேலும் 321 குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் மேலும் 321 பேர் குண மடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயி ரத்து 411 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண் ணிக்கை 87 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.

மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 447 பேர் வைத்திய கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply