கடந்த 24 மணித்தியாலங்களில் 11 விமானங்கள் மூலம் 728 பயணிகள் வருகை

கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 வரையான காலப்பகுதியில் 11 பயணிகள் விமானங்கள் மூலம் 728 பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


இவர்களில் 316 பேர் கட்டாரிலிருந்து இரு விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் 924 பயணிகள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து 100 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply