மொனராகல மாவட்டத்தில் இரு நாட்களில் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

மொனராகல மாவட்டத்திலிருந்து நேற்றும் இன்றுமாக கொவிட்-19 பாதிக்கப்பட்ட 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொனராகல பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துஷித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

கொடகமுவ, பிபில, வெல்லவாய மற்றும் மொனராகல ஆகிய பிரதேசங்களிலேயே நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இக்குழுவினர் சிகிச்சை நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மொனராகல மாவட்டத்தில் இதுவரை 530 கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 217 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Be the first to comment

Leave a Reply