மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 304 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக் களம் தெரிவித்துள்ளது.

அதில் 288 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 644ஆக உயர்ந்துள்ளது.

05 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர் கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண் ணிக்கை 86 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயி ரத்து 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 457 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண் ணிக்கை 83 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 340 பேர் வைத்திய கண் காணிப் பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொ ரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515 ஆக அதி கரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply