மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனையை ஆதரிக்கும் வடக்கு அரசியல்வாதிகளுக்கு ஆபத்து?

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனையை ஆதரித்தால் அவர்களுக்கு எதிராக நாட்டின் அரசியலமைப்பின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என நாடாளுமன்ற

உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் சத்தியப் பிரமாணத்திற்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர் அவர்களால் இவ்வாறான விடயங்களைக் கூறி உறுப்பினர் பதவிகளில் இருக்க முடியாது.

நாம் அரசாங்கம் என்ற ரீதியில் அந்த இடத்திற்கு செல்ல மாட்டோம். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும்.

அவ்வாறு செய்யாமல் பொறுமையுடன் செயல்படுகின்றோம். நாடாளுமன்றத்தில் உள்ள அநேகமான உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணத்தை மீறி உள்ளார்கள். அவர்களை வெளியேற்ற முடியும். ஆனால் நாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றார்.

Be the first to comment

Leave a Reply