கொஹுவலையில் காரொன்றிலிருந்து சடலம் மீட்பு

கொஹுவல – ஆசிரி மாவத்தை பகுதியில் காரொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காரும் சடலமும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

களுபோவில – பாத்திய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply