இலங்கையில் இன்றுவரை கைது செய்யப்படாமல் உள்ள பெண் தற்கொலை குண்டுதாரிகள்! சரத் வீரசேகர பகீர் தகவல்

சஹரானிடம் தாற்கொலைதாரிகளாக பயிற்சி பெற்ற இரண்டு பெண்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைதுசெய்ய நடவடிக்கையெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்த்திய விசேட உரையின் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சஹரானிடம் தாற்கொலைதாரிகளாக பயிற்சி பெற்றுள்ள 17 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் தற்போது இறந்துள்ளனர். மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனைய 2 பேரையும் கைதுசெய்ய நடவடிக்கையெடுக்கப்படும்.

சஹரானின் வலையமைப்புக்கு அப்பால் இலங்கையில் செயற்படும் ஏனைய அடிப்படைவாதக் குழுக்களை ஒடுக்கவும் அதன் பிரதான உறுப்பினர்களை கைது செய்யவும் புலனாய்வுத்துறையும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவும் செயற்பட்டு வருகிறது.

வன் உன்மா, ஸ்புத் தாஹிர், முஜர்தீன் ஹல்ஹா, சுப்பர் முஸ்லிம் உள்ளிட்ட குழுக்களாகும். முஸ்லிம் இராஜ்ஜியமொன்றை கட்டியெழுப்ப சஹரான், மதவாச்சி, வன்னி, தியவெல்ல ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, ஹிங்குல உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி சென்றுள்ள 8 பயிற்சி முகாம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முகாம்களுடன் தொடர்புடையவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Be the first to comment

Leave a Reply