வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் மேலும் நால்வருக்கு கொவிட்-19

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் நான்கு பேருக்கு நேற்றிரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாற்றான முறையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன்படி அங்கு பணியாற்றும் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் மாலை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொற்றாளர்களுடன்
இணைந்து பணியாற்றியவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்
ளப்பட்டன.

அதன் ஒரு தொகுதி முடிவுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில் அதில்
நான்கு பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மருதமடு, கல்நாட்டாங்கல், பதவியா, மதவாச்சி ஆகிய பகுதிகளைச்
சேர்ந்தவர்களாவர்.

அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சுயதனிமைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply