கொலையின் பின்னரே தலை துண்டிப்பு – குறுவிட்ட பெண்ணின் கொலை குறித்து அஜித்ரோகண தகவல்

டாம் வீதியில் சூட்கேசிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை கொலை செய்த பின்னரே கொலையாளி அவரது தலையை துண்டித்துள்ளார் என்பது பிரதேச பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
உபபொலிஸ்பரிசோதகர் குறிப்பிட்ட பெண்ணை எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் அவசியம் எனவும் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியாகின என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சடலம் யாருடைய எனக் கண்டறிந்த போதிலும் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தமையினால், மீட்கப்பட்ட சடலத்தின் அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் டீ.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்னவினால் வெளியிடப் பட்டுள்ள பரிசோதனை அறிக்கைக்கு அமைய தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் அப்பெண்ணின் மாதிரிகளுடன் ஒத்துப் போகின்றமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
சடலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply