கடத்தல் விவகாரம்- ஹிருணிக்காவுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2016 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் ஹிருணிகா மீது தாக்கல் செய்யப்பட்ட கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே அவருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply