இரணைதீவு விவகாரம்! அரசாங்கம் வெளியிட்ட புதிய செய்தி

சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டார். மேலும்,

கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், உரிய ஆய்வின் பின்னரே சுகாதார அமைச்சு இரணைதீவில் கொவிட் 19 தொற்று சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply