டுபாயில் நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையரை அமைச்சர் நாமல் சந்தித்தார்

இலங்கைக்குத் திரும்ப முடியாது டுபாயில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த இலங்கைத் தொழிலாளர் குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் பின் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘பல்வேறு சிரமங்களால் சொந்த நாடு திரும்ப முடியாத இலங்கை சமூகத்தினரை சந்தித்தோம். அமைச்சர்கள் சானக தினுஷன் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் இணைந்து அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்ததில் மகிழ்ச்சி’ என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.குறித்த குழுவினருக்கு விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply