மண்ணெண்ணெய் மானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை

மண்ணெண்ணெய்க்கான மானியங்களை எவ்வித முறைகேடுகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நேரடியாக பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்று (08) முதல்தடவையாக கூடிய போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அத்துடன், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அரச வங்கிகளிடமிருந்து டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply