டயர் பற்றாக்குறை குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் : அமைச்சர் பந்துல

விவசாயத்துறையில் பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் போன்ற வாகனங்களுக்கான டயர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டு பொறுப்பானோர் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்குவதன் மூலம் பற்றாக்குறை ஏற்படுமிடத்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய அவர், “ஏற்றுமதிக் கட்டணம் இன்றி மிளகு ஏற்றுமதி செய்வதற்கும் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக பணம் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிளகை ஏற்றுமதி செய்ய இலங்கை ஏற்றுமதி சபை சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ மிளகுக்கு 600 முதல் 700 ரூபா வரை அறவிடுவதன் மூலம் அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும்” என்றார்.

Be the first to comment

Leave a Reply