சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது

குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக தவறான ஆதாரங்களை வழங்கியது மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கார்னியா் பனிஸ்டர் பிரான்சிஸ்ஸுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று சுமத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தன்னை யாரோ கடத்திய பின்னர் விடுதலை செய்தனர் என கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 25ஆம் திகதி தன்னை இனந்தெரியாத நபர்கள் கடத்தி தூதரக இரகசியங்களை தெரிவிக்குமாறு துன்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Be the first to comment

Leave a Reply