அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (09) பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளன.

இந்த இரு அறிக்கைகளும் இன்று பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply