திடீர் மின்வெட்டு! யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தானது நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இரவு 8.45 மணியளவில் இடம்பற்றுள்ளது.

மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் அவரை அவசரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனதால் அதிக குருதிப்போக்கால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் கன்னாதிட்டிக் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளரான நல்லூரைச் கேசர்ந்த சிறீஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply