வடக்கில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 22 பேரும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் அடிப்படையில்,

காரைநகர் அரச பேருந்து டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதிகள் மூவர், நடத்துநர்கள் மூவர், நேரக்கணிப்பாளர்கள் இருவர்,

ஊர்கவாற்றுறையில் மெலிஞ்சிமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த 09 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர் ஒருவர்,

யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்,

உடுவிலைச் சேர்ந்த இருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்),

ஆகியோருடன் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளின் படி சாவகச்சேரியைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply