இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தர்கா நகரைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரும் கொழும்பு 6 ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரும் ஜா-எலவைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply