நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொ ரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 359 பேரில் 77 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 34 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 18 பேர், யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட் டங்களில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 15 பேர், மொன ராகலை மாவட்டத்தில் 13 பேர், கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 12 என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 08 பேர், களுத்துறை மாவட்டத்தில் 07 பேர், புத்தளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 06 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 22 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply