கொழும்பில் பிறந்து 7 வாரங்களே நிறைவடைந்த குழந்தையை பலியெடுத்த கொரோனா

பிறந்து 7 வாரங்களே நிறைவடைந்த குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெலிமடைபிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வார குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பதாக மேற்படி குழந்தை வெளிமடை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குழந்தை பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இருதய பகுதியில் தண்ணீர் நிரம்பியுள்ளமைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

மேற்படி குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

மேற்படி குழந்தை கடந்த 5ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குழந்தை மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply