கொழும்பில் கனேடிய உயர் ஸ்தானிகர் கண்காணிக்கப்படுகிறாரா?

தனது நடவடிக்கைகள் இரகசியமான முறையில் சந்தேகிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் ஊடகங்கள் எவையும் இல்லாதபோதிலும், ​​தனது தனிப்பட்ட கலந்துரையாடல்களை ஊடகங்கள் எவ்வாறு பெறுகினறன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை கனடா உயர் ஸ்தானிகர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் சந்தித்தமை தொடர்பில் இரண்டு பிரதான உள்நாட்டு செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹால்டன் மற்றும் தென் கொரிய தூதுவர் இடையேயான சந்திப்பு குறித்தும் உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.

எனினும், இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை எனவும், கனடா உயர் ஸ்தானிகர் கண்காணிக்கப்படுகிறார் என்ற செய்திகளையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மறுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply