கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மேல் மாகாணத்தை தவிர நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி முன்னதாக அறிவித்தபடி அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப் படும் என்று ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை திறக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித் துள்ளார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறப்பது குறித்து சுகாதார வழி காட்டுதல்களை இரண்டு நாட்களுக்குள் வழங்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்து திகதி தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரி வித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply