யாழில் 06 பேருக்கு கொரோணா தொற்று.!!!!!!!

யாழில் 06 பேருக்கு கொரோணா தொற்று.!!!!!!!

யாழில் 06 பேருக்கு கொரோணா தொற்று.!!!!!!!

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாழ். சிறைச்சாலைக் கைதி, மற்றையர் மல்லாவியில் நடைபெற்ற மரணச் சடங்குக்கு சென்று திரும்பியர், இன்னொருவர் கொழும்பிலிருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஆவார்.

இதேவேளை சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் வசிக்கும் ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை ஏற்கனவே சண்டிலிப்பாயில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் தொடர்பிலிருந்தவர்.

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட தாதியர்களுடன் தொடர்பிலிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

இன்னொருவர் 79 வயதுடைய மூதாட்டி, அவர் சிகிச்சைக்காக வந்த நிலையில் நோய் அறிகுறி காணப்பட்டமையால் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply