தடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் – சுகாதார அதிகாரி

கொரோனாவைரஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காயச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவசிகிச்சைய பெற்றுக்கொள்ளவேண்டும் பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் உருவாகக்கூடிய காய்ச்சல் வழமையாக 48 மணித்தியாலங்களிற்கு பின்னர் நீடிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னரும் அந்த காய்ச்சல் தொடர்ந்தால் அதனை அலட்சியம் செய்யவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறான நிலை காணப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும், டெங்கு போன்ற வேறு நோய்களாலும் காய்ச்சல் காணப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply