ஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹற்றன் பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்டெடன் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை இன்று(5) கண்டெடுத்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் -ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதைக்குக் கீழாக தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட இச்சடலம் குறித்து தோட்டத் தொழிலாளர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப நபர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பிறவுண் நிற சேர்ட்டும் சாரமும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஹட்டன் நீதிமன்றத்தால் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின் டிக்கோயா ஆதார மருத்துவமனையின் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் குறித்த சடலம் அனுப்பப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply