
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுவங்கேணி பிரதேசத்தில் உயிரிழந்த தனது மனைவியின் 41ம் நாள் கிரிகையில் அன்று தனக்குத்தானே தூக்கிட்டு இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் அண்மைக்காலமகாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஏழு மாதங்களுக்கு பின்னர் இருவருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குறித்த யுவதி கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து சொண்டார்.
இதனையடுத்து விரக்தி அடைந்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் 41ம் நாள் கிரிகையினை முடித்து விட்டு அவரின் வீட்டில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது அறியமுடிந்துள்ளது.
இந்நிலையில் ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Be the first to comment