குச்சவெளி தொடுவாய் பகுதியில் பொதுமக்கள் உட்செல்லத் தடை; தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும் அறிவிப்பு

தொல்பொருள் எச்சங்கள் இருப்பதனால் பொதுமக்கள் உட்செல்லத் தடை எனும் அறிவிப்பு பலகையொன்று குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பிரதான வீதி தொடுவாய் எனும் இடத்தில் திடீரென நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் குச்சவெளி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கையில்:

கடந்த 50 ஆண்டுகளாக தமது பராமரிப்பில் இருந்த காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்றும் இந்தக் காணி அமைவிடத்தில் தொல்பொருளுக்கான எந்தவிதமான எச்சங்களும் புலப்படவில்லையென்றும் காடுகள் இல்லாத நிலப்பரப்பாகவே இது இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

50 வருடங்களுக்கு மேலாக மக்களால் பராமரிக்கப்பட்டுவந்த குச்சவெளி ஜாயா நகர் சல்லிமுனைப் பகுதி குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் அரச காணி என அடையாளமிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இதனை அடுத்து புதன்கிழமை அப்பகுதிக்குச் சென்று எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அப்பகுதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply