
பண்டாரவளை தனியார் பாடசாலையில் கடமையாற்றி வந்த ஆசிரியை ஒருவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக,பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியாகியுள்ள ஏழு பேரும் ககாகொல்லை சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை 60 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை, நேற்றுப் புதன்கிழமை வெளிவந்தது. அதற்கமையவே, மேற்படி ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Be the first to comment