பேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

பேருந்து உரிமையாளர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி இடைநிறுத்தம் ஆகிய வசதிகளை ஏப்ரல் 21 முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு நீடிக்க மத்திய வங்கி உடன்பட்டுள்ளது.

பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய வங்கி இம்முடிவை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 21 சலுகை காலம் முடியும் வரை குத்தகை வசதிகளைப் பெறவும் நிலுவைத் தொகையுடன் வாகனங்களை பறிமுதல் செய்வதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply