கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம் குறைந்து வருகிறது:சுற்றுச்சூழல் அமைச்சு

கொழும்பு நகரின் வளிமண்டல ஒட்சிசன் சதவீதம் சனத்தொகை விகிதத்தில் குறைந்து வருவதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நகரில் காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க அமைச்சு கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தினர்.

கொழும்பு நகரில் தினமும் ஒட்சிசனின் அளவை பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்படவுளள்ளது.

கொழும்பு மாநகர சபைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேயர் சேனநாயக்க கோரியுள்ளார் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply