வெளியாகின உடல்களை புதைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்-
– பிரேதப்பெட்டிகளை குடும்பத்தவர்களே – வழங்கவேண்டும்- உடல்நேரடியாக குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்படாது –
பத்து நிமிடங்களிற்கு இறுதி சடங்குகள்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் உயிரிழப்பு ஏற்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் அல்லது தலைமை அதிகாரிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்கையளிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை அடக்கம் செய்வதற்கோ அல்லது தகனம் செய்வதற்கோ அனுமதி வழங்கப்படும்.
உடல்களை அடக்கம் செய்வதற்கான பகுதி இரணைதீவு என குறிப்பிட்ட அதிகாரி மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் குறிப்பிடவேண்டும்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் பத்து நிமிட இறுதிசடங்கிற்கு ஏற்பாடு செய்யவேண்டும்இசுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இரண்டுமதகுருமார் அனுமதிக்கப்படுவார்கள்.
உயிரிழப்பு மருத்துவமனையில் இடம்பெற்றால் மதநிகழ்வுகள் மற்றும் உடல்களை பார்வையிடும் நடவடிக்கைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் கலந்துகொள்ளலாம்.
ஊடலை பத்து நிமிடமே பார்வையிடலாம்.
உடல்நேரடியாக குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்படாதுஇ பிரேதபெட்டியை உறவினர்களே வழங்கவேண்டும்.
மருத்துவ நிலையங்களிற்குள் படம் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply