யாழ். இரத்த வங்கியில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு; குருதிக் கொடையாளர்களிடம் வேண்டுகோள்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்
கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதிக் கொடையாளர்கள்
உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என வடபிராந்திய குருதி
மாற்று பிரயோக வைத்திய நிபுணர் ம து ரா ங் கி கிருஷ்ணபிள்ளை
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லா வகையான இரத் த வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவு
கிறது. கொவிட் தொற்று காரணமாக நடமாடும் இரத்ததான முகாம்
களை நடத்த முடியாமல் போனமையால் நாடளாவிய ரீதியில் இரத்த
சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், விபத்துகளில் பாதிக்
கப்படுவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு வழங்குவதற்கு அதிக
இரத்தம் தேவைப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடைய
வர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும். தேசிய குருதி
மாற்றுப் பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முன்பதிவுகளை
செய்து குருதியை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply