குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழ ங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கு இலவசமாக இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் மின் சாரத்தை வழங்கச் சகல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளையும் அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply