யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி

யாழ். மாவட்ட செயலக முற்றுகைப் போராட்ட நிறைவில் அரச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்தது முன்னணி!

யாழ். மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டு இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நிறைவில் மாவட்டச் செயலர் மற்றும் ஆளுநரின் பிரதிநிதி ஆகியோரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதை நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்டச் செயலகத்தினை முடக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மறியல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படிருந்தது.

இன்று காலையில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம் பிற்பகல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முடிவுக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இறுதியில் குறித்த விடையம் தொடர்பான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் சென்று ஆளுநரின் பிரதிநிதியிடமும் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் பங்கெடுத்திருந்தனர்

Be the first to comment

Leave a Reply