திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை நெருங்கியது

நாட்டில் மேலும் 492 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 477 திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 15 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 905 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 81,009 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 4 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகி ன்றனர்.

நேற்றைய தினம் 732 கொரோனா தொற்றால் குணமடைந் துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொ த்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 559 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply