மியன்மார் பிரஜைகளை திருப்பியனுப்பிய மலேஷியா

ஆயிரத்து 86 மியன்மார் பிரஜைகளை அவர்களது தாய்நாட்டிற்கு மலேஷியா திருப்பியனுப்பியுள்ளது.

நீதிமன்றமொன்றின் உத்தரவு மற்றும் மனித உரிமை செயற்பாட்டுக் குழுக்களின் கோரிக்கை ஆகியவற்றை புறந்தள்ளி, மலேஷியாவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மியன்மாருக்கு திருப்பியனுப்பப்பட்டவர்களில், அங்கு துன்புறுத்தல்களால் அல்லலுறும் பழங்குடி சிறுபான்மையினரும் அடங்குவதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறானவர்களை மீளவும் மியன்மாருக்கு அனுப்புவது, அவர்களை மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் எனவும் அந்த குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், குடிவரவு குற்றங்கள் புரிந்தவர்களையே நாட்டிற்கு திருப்பியனுப்பியதாகவும்  அரசியல் தஞ்சம் கோரிய எவரையும் திருப்பியனுப்பவில்லை எனவும் மலேஷியா தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply