ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயவேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு

2014 அல் அளுத்கமவில் ஆற்றிய உரைக்காக பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஐசிசிபிஆரின் கீழ் பதிவு செய்யமுடியுமா என சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவேண்டும் என உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் வஹாபிசத்திற்கு தடை விதிக்கவேண்டும், அனைத்து தௌஹீத் அமைப்புகளுக்கும் பொதுபல சேனாவிற்கும் தடை விதிக்கவேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தீவிரவாத கொள்கைள் இலங்கைக்குள் நுழையமுடியாதபடி இணையவெளியையும் சமூக ஊடகங்களையும் ஒழுங்குபடுத்தவேண்டும், மதம் தொடர்பான இணையத்தளங்கள்புளொக்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply