ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் இடையிலான சந்திப்பு இன்று

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று (24)  சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர், கொழும்பில் நடைபெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று பிற்பகல், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ள இம்ரான் கான், பின்னர் பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று (23) மாலை 4 மணியளவில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply