நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட 48 தரங்களின் அதிகாரிகள் இன்று (24) மற்றும் நாளைய (25) தினங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

சுமார் 20 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினை குறித்து சுகாதார செயலாளரிடம் கலந்துரையாடிய போதிலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply