நெடுந்தீவுக் கடலில் காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகில் இருந்து
காணாமல் போன இருவரில் ஒருவரது சடலம் நயினாதீவை அண்டிய பகுதி
யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் பயணித்த மேனன்
மற்றும் றொபின்சன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.

இவர்கள் அன்று காலை 10 மணியளவில் நெடுந்தீவில் இருந்து கடல் உற்பத்திகளைத் தனியான படகில் ஏற்றியவாறு நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கிப் பயணித்துள்ளனர்.

அந்தப் படகில் ஏற்றி வரப்பட்ட கடல் உற்பத்திகள் குறிகட்டுவானில் தரித்து நின்ற
கூலர் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளன.

கூலரிற்குப் பொருள்களைக் கை மாற்றிய பின்பு மீண்டும் நெடுந்தீவு
நோக்கி பிற்பகல் ஒரு மணியளவில் அவர்களின் படகு பயணத்தை ஆரம்பித்துள்
ளது.

அது மாலை 5 மணியளவில் ஆட்கள் யாருமற்ற நிலையில் நெடுந்தீவுக்
கரையில் ஒதுங்கியதால் நெடுந்தீவு மீனவர்கள் மற்றும் கடற்படையினர்
சகிதம் தீவிர தேடுதல் இடம்பெற்றது.

இரு நாள்களாகத் தேடுதல் இடம்பெற்ற நிலையில் இன்று மாலை ஒருவ
ரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்கின்றது.

Be the first to comment

Leave a Reply